7 நிமிடத்தில் 5395 மின்னல் தாக்குதல்கள் - அரண்டுபோன மக்கள்
ஒரிசா மாநிலத்தில் 7 நிமிடங்களில் சுமார் 5395 மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 நிமிடங்களில் 5395 மின்னல் தாக்குதல்
கோராபுட் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கு இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இன்று காலை கோராபுட் மாவட்டத்தின் கோராபுட், ஜெய்பூர், செமிலிகுடா, நந்தபூர் மற்றும் லமதாபுட் பகுதிகளில் தொடர்ந்து மின்னல் தாக்கிக்கொண்டே இருந்தது.
ஒரே நேரத்தில் ஏழு நிமிடத்தில் 5395 மின்னல் தாக்கியது, ஒரிசா மாநிலத்தில் இது போன்ற மின்னல் தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும், 30 நிமிடங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட மின்னல்கள் ஏற்பட்டதே சாதனையாக இருந்தது.
இன்று நடந்த மின்னல் தாக்குதல் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது, தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.