பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்ட 7 இடங்கள் எது தெரியுமா?
பொதுவாகவே அனைவரும் சுற்றுலா சென்று பல இடங்களை பார்வையிட வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம்.
அதற்காக உள்ளூரில் உள்ள இடங்களுக்கும் வெளியூரில் உள்ள இடங்களுக்கும் செல்வார்கள்.
ஆனால் ஒரு சில இடங்கள் பொதுமக்கள் பார்வையிட தடைசெய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் ஆபத்தான இடங்கள் பெரும்பாலும் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது உண்மை.
இந்த இடங்களில் கடுமையான வானிலை, எரிமலை செயல்பாடு, நச்சு சூழல்கள் அல்லது தீவிர வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடங்கும்.
அதையும் மீறி சில கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்களுக்கு ஒரு சில இடங்கள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு தடை செய்யப்பட்ட இடங்கும், ஏன் தடை செய்யப்பட்டது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
1. நார்வே, ஸ்வால்பார்ட் உலக குளோபல் விதை வங்கி - Svalbard Seed Vault, Norway
நார்வே நாட்டின் வடக்கே, ஆர்டிக் வட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள சுவல்பார்டு தீவு, உலகின் விதைப் பெட்டகம் என்று அழைக்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு வகையான பயிர்களின் விதைகளை பாதுகாப்பதற்காக, இது நிறுவப்பட்டுள்ளது. எனவே இதை பொதுமக்கள் பார்வையிட அனுமதி கிடையாது.
2. யுஎன் தாங்கல் மண்டபம் - U N Buffer Zone in Cyprus
கிரேக்க சைப்ரஸ் மற்றும் துருக்கிய சைப்ரஸ் சமூகங்களை பிரிக்கும் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியாக UN தாங்கல் மண்டபம் இருக்கிறது. இங்கு பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அரசியல் பதட்டங்கள் ஏற்படும் என்பதால், இங்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. க்வின் ஷி ஹுவாங்கின் கல்லறை - Tomb of Qin Shi Huang, China
சீனாவில் உள்ள இந்த கல்லறையை பயணிகள் யாவரும் பார்வையிட முடியாது. இது டெரகோட்டா ராணுவத்தின் இருப்பிடமாக பார்க்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். எனவே இங்கு பயணிகளும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
4. நெவாடா Area 51,- Nevada, USA
தேசிய பாதுகாப்பு, மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பம் மற்றும் சோதனை விமானங்கள் நெவாடாவில் உள்ள அமெரிக்க விமானப்படை ஏரியாவில் இருப்பதால், அங்கு பயணிகள் செல்ல முடியாது. மேலும் இங்கு இரகசிய தகல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
5. வட சென்டினல் தீவு, இந்தியா- North Sentinel Island, India
இந்தியாவில் உள்ள வட சென்டினல் தீவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேல் பழங்குடியினர் தங்களது வாழ்வை நடத்தி வருகின்றனர். எனவே அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருதி, இங்கு மக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
6. வாடிகன் ரகசிய ஆவண காப்பகம் - Vatican Secret Archives
வரலாற்று ஆவணங்கள், கடிதங்கள், கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு போன்ற பல ஆவணங்கள் வாடிகன் ரகசிய ஆவண காப்பகத்தில் இருப்பதால், இங்கு பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் செல்வதாக இருந்தாலும் பல சட்டத்திடத்திற்கு உடன்ப்பட்டு தான் செல்ல வேண்டும்.
7. லாஸ்காக்ஸ் குகை, பிரான்ஸ் - Lascaux Cave, France
பிரான்ஸல் உள்ள லாஸ்காக்ஸ் குகையில் 17ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கலை வடிவங்கள் இருப்பதால், இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. னிதர்கள் வருகையால் குகையின் தனித்துவமான சூழல், பார்வையாளர்களிடமிருந்து வெளிப்படும் அதிகரித்த கார்பன் டை ஆக்சைடு அளவுகள் குகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சிதைவதற்கு வழிவகுக்கும். எனவே இங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |