கோவா கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு
கோவாவின் ஷிர்கவ் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லைராய் தேவி கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜாத்ரா திருவிழவில் கலந்து கொள்ள, கோவா மட்டுமின்றி, மகாராஷ்டிரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு
நேற்று இரவு நடைபெற்ற ஜாத்ரா திருவிழாவில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், அதிகாலை 4 மணியளவில் திடீரென கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், அதிகளவிலான பக்தர்கள் கூடியதும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததுமே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
Saddened by the loss of lives due to a stampede in Shirgao, Goa. Condolences to those who lost their loved ones. May the injured recover soon. The local administration is assisting those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 3, 2025
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |