14 மணி நேர போராட்டம் 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு: ஜெலென்ஸ்கி பாராட்டு
7 years old boy pulled alive from rubble in Kyiv: கீவ்வில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 மணி நேரத்திற்கு பிறகு 7 வயது சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடக்கே அமைந்துள்ள Dymer நகரில் இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய திடீர் ட்ரோன் தாக்குதலில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 13 பேர் வரை உயிரிழந்த நிலையில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 14 மணி நேரத்திற்கு மேலாக சிக்கியிருந்த 7 வயது சிறுவன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட 7 வயது சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுவனை காப்பாற்ற போராடிய அனைத்து மீட்பு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தன்னுடைய நன்றியை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் தகர்க்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து 79 வயது மூதாட்டி ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக கீவ் பிராந்திய தலைவர் டைமூர் தகாசென்கோ தெரிவித்துள்ளார்.
இரவில் டைமர் நகரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவத்தில் மட்டும் 9 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.