முன்னாள் காதலனுக்கு விஷம் கலந்த ஈஸ்டர் சாக்லேட் அனுப்பிய பெண் - இறுதியில் நேர்ந்த சோகம்
பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோர்டெலியா பெரேரா பார்போசா(Jordélia Pereira Barbosa) என்ற பெண் தனது முன்னாள் காதலர் வீட்டிற்கு கொரியர் மூலம், ஈஸ்டர் சாக்லேட் அனுப்பியுள்ளார்.
விஷம் கலந்த ஈஸ்டர் சாக்லேட்
அதில் "மிரியன் லிராவுக்கு அன்புடன். ஈஸ்டர் வாழ்த்துக்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. அதனை பெற்றுக்கொண்ட அவரது மனைவி மிரியன் லிரா(Mirian Lira), தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு பின்னர் தானும் சாப்பிட்டார்.
அதனை சாப்பிட சிறுது நேரத்தில், அவரது 7 வயது மகன் லூயிஸ் சில்வாவிற்கு(Luís Fernando Rocha Silva), உடனடியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக இம்பெராட்ரிஸில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
லூயிஸ் சில்வா சிகிச்சை பெற்றுகொண்டிருக்கும் போதே, மிரியனும்(Evelyn Fernanda) அவரது 13 வயது மகள் ஈவ்லினும் கைகள் ஊதா நிறமாக மாறுதல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜோர்டெலியா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பழிவாங்குதல் மற்றும் பொறாமை காரணமாக அவர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |