வக்ர நிவர்த்தி அடைந்த புதன்.., கவனமாக இருக்கவேண்டிய 7 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் கடந்த ஏழாம் திகதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் குறிப்பிட்ட 7 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். திட்டமிட்டபடி பணிகள் நிறைவேறுவது தாமதமாகலாம். எனினும் அமைதியாக சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிப்பது சாத்தியமாகும்.
ரிஷபம்
சவால்களை கொடுக்கக் கூடும். எதிர்பாராத பிரச்சனைகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. எனினும் திட்டமிட்டபடி செயல்பட்டால் இன்னல்கள் தீரும்.
சிம்மம்
நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே சிந்தித்து செயல்படுவது நல்லது. கடின உழைப்பால் பிரச்சனைகளை சமாளிக்கலாம். தேவையற்ற பேரிச்சை தவிர்ப்பதால் குழப்பங்களை தவிர்க்கலாம்.
துலாம்
தடைகள் ஏற்படும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். அவசர முடிவுகள் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே சிந்தித்து செயல்படுவது, விவேகமான இருக்கும்.
விருச்சிகம்
மன அழுத்தமும் மன உளைச்சலும் அதிகரிக்க கூடும். வேலையில் காட்டும் அலட்சியம் காரணமாக சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். கவனமாக செயல்படுவதும், சிந்தித்து முடிவுகளை எடுப்பதும் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
மகரம்
சோம்பலையும் மந்த நிலையும் ஏற்படுத்தும். இதனால் திட்டமிட்டபடி வேலை நிறைவேறாமல், சிக்கல்கள் ஏற்பட காரணமாகும். உறவுகளை பாதிக்கப்படாமல் பேச்சில் கவனம் தேவை. எச்சரிக்கையாக செயல்பட்டால், பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கலாம்.
மீனம்
இழப்புகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த பலனை பெற கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கவனமாக சிந்தித்து செயல்படுவதால், மன உளைச்சலை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |