போலி கொரோனா தடுப்பூசி... கட்டணம் செலுத்தி போட்டுக்கொண்ட 70,000 பேர்: சிக்கிய பெண் மருத்துவர்
ஈக்வடார் நாட்டில் 15 டொலர் கட்டணத்திற்கு போலி கொரோனா தடுப்பூசி வழங்கிய சுகாதார மையத்தை பொலிசார் அதிரடியாக மூடியுள்ளனர்.
ஈக்வடார் தலைநகர் குயிட்டோ பகுதியில் செயல்பட்டுவந்த இரகசிய சுகாதார மையம் ஒன்றிலேயே போலியான தடுப்பூசி மருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சமீப காலம் வரை மசாஜ் பார்லராக செயல்பட்டு வந்த குறித்த மையமானது திடீரென்று கொரோனா மருந்துகளுக்கான சுகாதார மையமாக மாறியுள்ளது.
பெண் ஒருவர் முன்னெடுத்து நடத்திவரும் இந்த மையத்தில் இடுந்து இதுவரை 70,000 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு கண்டறிந்துள்ளனர்.
ஒரு டோஸ் மருந்துக்கு 15 டொலர் கட்டணமாக வசூத்தி அந்த பெண்மணி, மொத்தம் 3 டோஸ்கள் எடுத்துக் கொண்டால் மட்டுமே முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவும் நம்ப வைத்துள்ளார்.
மட்டுமின்றி, முழு உடல் சுத்தம் செய்யும் சிகிச்சை என கூறி, 100 டொலர் கட்டணம் வசூலித்த பின்னரே, மூன்று டோஸ் கொரோனா தடுப்பூசி 70,000 பேர்களுக்கு அளித்துள்ளார்.
மருத்துவர் என தம்மை அடையாளப்படுத்தியுள்ள குறித்த பெண்மணியிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈக்வடார் நிர்வாகம் இதுவரை அமெரிக்காவின் பைசர் நிறுவன தடுப்பூசிக்கும் பிரித்தானியாவின் AstraZeneca தடுப்பூசிக்கும் மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
மட்டுமின்றி, நாடு முழுவதும் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கியே பொதுமக்களுக்கு அளிக்க உள்ளது.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மில்லியன் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கவும் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

