எனது முதல் புத்தாண்டு தீர்மானம் இது தான்.. வெளிப்படுத்திய WHO தலைவர்! உலக நாடுகளுக்கு அழைப்பு
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், தனது முதல் புத்தாண்டு தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்விட்டரில் டெட்ரோஸ் அதானம் பதிவிட்டதாவது, 2022 ஜூலை மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள 70% மக்களுக்கு தடுப்பூசி போடுவது தான் எனது முதல் புத்தாண்டு தீர்மானம்.
இந்த தீர்மானத்தை அடைய அனைத்து அரசாங்கங்களும், கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்களும் மற்றும் பார்ட்னர்ஸ்களும், தடுப்பூசியை சமமாக வழங்குவதன் மூலம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால் நாம் கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவரலாம்.
To achieve my No. 1 #NewYear's resolution, we need all governments, #COVID19 vaccine makers and partners to #ACTogether to vaccinate 70% of people in every country by July 2022,
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) January 3, 2022
With #VaccinEquity, we can end the pandemic.
But we must start now: The ⏰ is ticking. pic.twitter.com/xXsUmBSmcU
ஆனால், நேரம் விரைவாக கடந்து செல்கிறது, நாம் உடனே இதை தொடங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அழைப்பு விடுத்துள்ளார்.