700 டன் அணுசக்தி கழிவுகளை ஜேர்மனிக்கு அனுப்பும் பிரித்தானியா!
700 டன் அணுசக்தி கழிவுகள் ஐரோப்பாவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
ஐரோப்பாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட அணுசக்தி கழிவுகளை மீண்டும் அந்தந்த நாடுகளுக்கே அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 700 டன் அளவிலான அணுசக்தி கழிவுகள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படவுள்ளது.
பிரித்தானியாவின் செல்லாஃபீல்ட் அணு நிலையம் (Sellafield) ஜேர்மனியில் மின்சாரம் உருவாக்க பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை reprocessing செய்யும் பணியை மேற்கொண்டது.
ஒவ்வொரு கொள்கலனிலும் 110 டன்கள் வரை பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை எடுத்துச் செல்ல முடியும்
இதன் ஒரு பகுதியாக, 7 பெரிய உருளை வடிவிலான கொள்கலன்களில், ஒவ்வொன்றிலும் 110 டன் அணுசக்தி கழிவுகள் அடங்கிய வகையில், ஜேர்மனியின் Isar Isar Federal storage facility-க்கு அனுப்பப்படுகிறது.
செல்லாஃபீல்ட் அதிகாரி ஒருவர், "இது பிரித்தானியாவிலிருந்து உயர் நிலை அணுசக்தி கழிவுகளை திருப்பி அனுப்பும் முக்கியமான முயற்சி" எனக் குறிப்பிட்டார்.
மூன்று கட்டங்களாக அனுப்பப்படும் திட்டத்தில் இது இரண்டாவது கட்டம் ஆகும்.
முதலாவது கட்டமாக, ஆறு கொள்கலன்களில் 2020ஆம் ஆண்டு ஜேர்மனியின் பிப்லிஸ் (Biblis) பகுதியில் அனுப்பப்பட்டன.
கழிவுகள் எவ்வாறு அனுப்பப்படும்?
- 20 அடி நீளமும் 8 அடி விட்டமும் கொண்ட கொள்கலன்களில் கழிவுகள் அடைக்கப்படும்.
- திறமை வாய்ந்த கப்பலின் மூலம் ஜேர்மனியிலுள்ள துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
- பின்னர் ரயிலில் இறுதித் தளத்திற்குப் பரிமாறப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tonnes of nuclear waste to be sent back to Europe, nuclear waste to be sent from UK to Germany