இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கெட்ட செய்தி.., 70 சதவீத தொழிலாளர்கள் பணிநீக்கம்
இந்த நிறுவனமானது 70 சதவீத தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
தொழிலாளர்கள் பணிநீக்கம்
டிஜிட்டல் கேமிங் நிறுவனமான Games24X7பெரிய அளவிலான பணிநீக்கங்களைத் தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனமானது அதன் ஊழியர்களில் சுமார் 70% பேரை பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பணம் செலுத்துதல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான ஒன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 21-ம் திகதி அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டமானது மின் விளையாட்டு மற்றும் திறன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது. ஆனால் அனைத்து வகையான உண்மையான பண ஓன்லைன் கேமிங்கையும் தடை செய்கிறது.
இந்த சட்டம் அத்தகைய விளையாட்டுகளுக்கான கட்டணங்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுத்துவதைத் தடுக்கிறது மற்றும் அவற்றை விளம்பரப்படுத்துவதைத் தடை செய்கிறது.
பண விளையாட்டுகளை விளம்பரப்படுத்தினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக்கினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு ரூ.2 கோடி வரை அபராதம் மற்றும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |