100 ரூபாயின் மதிப்பு நேபாளத்தில் எவ்வளவு தெரியுமா?
இந்திய நாணயத்தின் மதிப்பு நேபாளத்தில் இவ்வளவு ரூபாய்க்கு சமமாகும்.
100 ரூபாயின் மதிப்பு?
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தகவல் தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் சமூக வலைதள நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும் அந்நாடு உத்தரவிட்டது.
ஆனால், இதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் மறுத்து விட்டதால் அதனை அந்நாடு தடை செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடை செய்ய வேண்டியது அரசின் ஊழலை தான், சமூக வலைதளங்களை இல்லை என்றும் கூறி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பலரும் சுற்றுலா செல்ல விரும்பும் நாடான நேபாளத்தில் உள்ள நாணயத்தின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எவ்வளவு சமம் என்று தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர்.
நேபாளத்தின் அதிகாரப்பூர்வ நாணயம் நேபாளீஸ் ரூபாய் ஆகும். செப்டம்பர் 10-ம் திகதி நிலவரப்படி இந்தியாவின் 1 ரூபாயின் மதிப்பு நேபாளத்தில்1.61 நேபாள ரூபாய்க்கு சமமாகும்.
இதன்படி இந்தியாவின் 100 ரூபாய் மதிப்பு தோராயமாக 160.69 நேபாள ரூபாய் மதிப்புடையதாக இருக்கும்.
இதனிடையே, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே நல்ல உறவு இருப்பதால் அங்குள்ள பல இடங்களில் இந்திய ரூபாய்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |