இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மெட்டா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் 2021ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் சமூக வலைதளங்கள் தங்களின் மாதாந்திர நடவடிக்கைகளை மத்திய அரசுக்கு தெளிப்படுத்தி வழங்க வேண்டும்.
அத்துடன் பயனர்களின் புகார்கள் மற்றும் அரசின் பரிந்துரைகள் ஆகியவற்றை ஏற்று வரம்புகளை மீறும் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வாட்ஸ் அப்பில் முடக்கப்படும் கணக்குகள் குறித்த தகவல்களை அதன் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டு வருகிறது.
71 லட்சம் கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றில் விதிமுறைகளைப் பின்பற்றாத கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் தடை செய்து வருகிறது.
2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் இவ்வாறு 71,96,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 19,54,000 வாட்ஸ் அப் கணக்குகள் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையின் கீழ் நீக்கப்பட்டுள்ளது. பயனர்களிடம் இருந்து நவம்பர் மாதத்தில் மட்டும் 8841 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |