ஐஐடி பட்டதாரியின் பிரியாணி நிறுவனம்: 2023ல் மட்டும் ரூ. 221 கோடி வருவாய்: அசத்தும் இந்தியர்
ஐஐடி பட்டதாரியின் பிரியாணி கடை 2023ம் ஆண்டில் ரூ. 220 கோடிக்கு வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
ஐஐடி பட்டதாரியின் பிரியாணி நிறுவனம்
ஆக்ராவை சொந்த ஊராக கொண்ட விஷால் ஜிண்டால் ஐஐடி புவனேஸ்வரில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இவர் எலக்ட்ரானிக்ஸ் டிரேடிங்கில் நல்ல வருவாயை ஈட்டி வந்த நிலையில், ஆக்ராவில் உள்ள உணவு மார்க்கெட்டை பார்த்த பிறகு புதிதாக வணிகம் ஒன்றை தொடங்கி லோக்கல் உணவை தேசிய பிராண்டாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து 2015ம் ஆண்டு விஷால் ஜிண்டால் தன்னுடைய நண்பர் கௌஷிக் ராயுடன் “பிரியாணி பை கிலோ” உணவுச் சங்கிலி தாயகம் என்ற நிறுவனத்தை தொடங்கி பிரியாணி தொழிலை தொடங்கியுள்ளார்.
தந்தை அளித்த ஆதரவு காரணமாக பிரியாணி பை கிலோ நிறுவனம் டெலிவரி சார்ந்த நிறுவனமான உருவாகியது.
இந்த நிறுவனத்தில் தற்போது தம் பிரியாணிகள், கபாப்கள், குருமா போன்ற பல உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விஷால் ஜிண்டாலின் பிரியாணி பை கிலோ நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 45க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
வருமானம்
பிரியாணி பை கிலோ 2019ல் ஆண்டில் 18 கிளைகளுடன் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வந்த நிலையில், IvyCap என்ற நிறுவனம் வழங்கிய 5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளுக்கு பிறகு விஷால் ஜிண்டால் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தினார்.
இதன் மூலம் 2023ம் நிதியாண்டில் விஷால் ஜிண்டாலின் நிறுவனம் 221.75 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது என போர்ப்ஸ் இந்தியா கணக்கிட்டுள்ளது.
2024ம் ஆண்டு பிரியாணி பை கிலோ நிறுவனம் ரூ. 1000 கோடி லாபத்தை எட்டும் என நம்புவதாக விஷால் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |