காசாவின் 1500 ஆண்டுகள் பாரம்பரிய கட்டிடம்: முழுவதுமாக சிதைத்த இஸ்ரேல்
காசாவில் 1500 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவம் அழித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய ராணுவம், காசா பகுதியை முற்றிலுமாக கைப்பற்றும் நோக்கில் சண்டையிட்டு வருகிறது.
(Ali Jadallah – Anadolu Agency )
இந்த சண்டையில் இதுவரை 23,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக வெளியாகி வரும் அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
1500 ஆண்டுகள் பழமையான கட்டிடம்
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் காசாவில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான கட்டிடம் தகர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் நிறைந்த இந்த கட்டிடத்தில் பல ஆண்டுகளாக மக்கள் கூடி தொழுகைகளை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் இத்தகைய தாக்குதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து இருப்பதாக காசா தெரிவித்துள்ளது.
மத்திய காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி செல்ல வேண்டும் என் இஸ்ரேலிய நிதித் துறை அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |