71 வயதில் மலர்ந்த அபூர்வ காதல்! தன்னை விட 54 குறைந்த இளைஞரை கரம் பிடித்த பெண்.. வைரல் புகைப்படம்
அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னை விட 54 வயது குறைந்த இளைஞரை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டு சுமார் 7 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றார்.
அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில் வசித்து வருபவர் Gary(24). இவர் அதே பகுதியில் வசிக்கும் 77 வயதான Almeda என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதாவது Gary-க்கு 17 வயதான போதும் அதே வேளையில் Almeda-வுக்கு 71 வயதான போது இருவரும் 2015ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். 43 வருடங்களுக்கு முன்பு Almeda-வுக்கு Donald என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு முதல் கணவர் உயிரிழந்த நிலையில் தனது மூத்த மகனுடன் வசித்து வந்துள்ளார். தனக்கு ஆறுதலாக இருந்த ஒரே மகனும் 2015ஆம் ஆண்டு வலிப்பு நோயால் இறந்துவிட்டதால் Almeda மிகவும் மனமுடைந்துள்ளார்.
அந்த சமயத்தில் தனக்கு ஆறுதலாகவும் பலமாகவும் அமைந்த Gary-யுடன் காதலில் விழுந்துள்ளார். இந்நிலையில் 58 வயது வித்தியாசம் உடைய Gary-யை இருவரும் அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சுமார் 7 ஆண்டுகளாக ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஜோடிக்கு ஆரம்பத்தில் பலரும் பல வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அவற்றை எல்லாம் மீறி தங்கள் காதல் மீது கொண்ட நம்பிக்கையால் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.