பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா?
பிரித்தானியாவின் பிரதான கார் உற்பத்தி நிறுவனம் கிட்டத்தட்ட 72,000 கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
திரும்ப பெறப்படும் 72000 கார்கள்
பிரித்தானியாவின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான Stellantis, வாகனங்களின் எஞ்சினில் தீ பற்றுவதற்கான ஆபாயத்தை குறிப்பிட்டு கிட்டத்தட்ட 72,000 கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
Peugeot, Citroen, DS Automobile, Vauxhall, Alfa Romeo, Jeep and Fiat ஆகிய முன்னணி நிறுவனங்களின் கார்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பானது, ஏர்பேக் குறைபாடு காரணமாக 120,000 citroen உரிமையாளர்கள் உடனடியாக தங்கள் வாகனங்கள் ஓட்டுவதை நிறுத்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம் அறிவித்ததற்கு பிறகு வந்துள்ளது.
கார்கள் திரும்ப பெறப்படுவதற்கான காரணம் என்ன?
மேல் குறிப்பிடப்பட்டுள்ள கார்களின் எஞ்சின்களில் உள்ள குழாய்களின் நட்டுகள் தளர்ந்து எரிபொருள் கசிவை ஏற்படுத்துவதுடன் சில சமயங்களில் தீ பற்றுவதற்கான ஆபாயத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 தீ விபத்து சம்பவங்கள் பிரான்சில் ஏற்கனவே நிகழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார் நிறுவனம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நிலவரத்தை எடுத்துரைத்து வருவதுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட கார் டீலர்ஷிப் நிலையங்களுக்கு வாகனத்தை எடுத்து சென்று சரி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
திரும்ப பெறப்படும் கார் மாடல்கள்
Peugeot 208, 308, 408, 2008, 3008 மற்றும் 5008,
Citroen C3 Aircross, C3, C4, C4 X, C5 Aircross மற்றும் C5 X,
DS Automobiles DS 3 Crossback and DS 4.
Vauxhall Astra, Corsa, Frontera, Grandland X, Grandland மற்றும் Mokka,
Alfa Romeo Junior,
Jeep Avenger,
Fiat 600 மற்றும் Grande Panda,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |