12 நாட்களில் 21,000 பேர் கைது: இஸ்ரேலுடன் நடந்த போர்: ஈரான் முக்கிய அறிவிப்பு
இஸ்ரேலுடனான போரின் போது கிட்டத்தட்ட 21,000 பேர் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் போர்
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் இஸ்ரேல் கடந்த ஜூன் 13ம் திகதி வான்வழித் தாக்குதலை அரங்கேற்றியது.
இது இரு நாடுகளுக்கு இடையே போரை தூண்டியதுடன், 12 நாட்கள் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இறுதியில் இந்த போர் ஜூன் 24ம் திகதி சர்வதேச நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.
21,000 பேர் கைது
இந்நிலையில் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போர் மோதலில் கிட்டத்தட்ட 21,000 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதில், 260 பேர் உளவாளிகள் என்ற அடிப்படையிலும், 172 பேர் சட்டவிரோதமாக வீடியோ பதிவு செய்ததற்கும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்காக உளவு வேலை பார்த்ததற்காக கடந்த ஜூன் மாதம் மட்டும் ஈரானில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |