அடுத்த சர்ச்சையில் டொனால்ட் டிரம்ப்: Golf Club அரங்கத்திற்காக விவசாயிகள் வெளியேற்றம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்பத்திற்கு சொந்தமான கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோல்ஃப் கிளப் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்பத்திற்கு சொந்தமான கோல்ஃப் கிளப் திட்டத்திற்காக வியட்நாமில் விவசாயிகளிடம் இருந்து கிட்டத்தட்ட 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பை விட குறைவான பணம் மற்றும் சில மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர் உரிம கட்டணம் செலுத்தி டிரம்பின் நிறுவனத்திடம் இருந்து Kinhbac city என்ற வியட்நாம் நிறுவனம் கோல்ஃப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.
விவசாயிகளின் ஒரு சதுர மீட்டர் நிலங்களுக்கு 12 அமெரிக்க டொலர் முதல் 30 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆடம்பர மக்களின் விளையாட்டிற்காக சாதாரண பொதுமக்கள் தங்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |