20 வயது பெண்ணை திருமணம் செய்த 72 வயது கால்பந்து ஜாம்பவான்
72 year old malaysia footballer married 20 year old girl: மலேசிய கால்பந்து ஜாம்பவானான 72 வயதான டத்தோ அப்தா அலிஃப், 20 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
72 வயதில் கால்பந்து ஜாம்பவானுக்கு திருமணம்
மலேசிய கால்பந்து ஜாம்பவனாக கருதப்படுபவர் டத்தோ அப்தா அலிஃப்(Datuk Abdah Alif) .
1980 மாஸ்கோ ஒலிம்பிற்கு தகுதி பெற்ற மலேசிய அணியில் டத்தோ அப்தா அலிஃப்பும் இடம் பெற்றிருந்தார்.

ஆனால், சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மலேசியா ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்ததால், அப்தா ஒலிம்பிக்கில் விளையாட முடியவில்லை.
இந்நிலையில், தற்போது 72 வயதான அப்தா மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
72 வயதான அப்தா கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இந்த திருமணத்தை அவரது சகோதரரும், முன்னாள் தேசிய அணி வீரருமான யூனுஸ் அலிஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த திருமணம் குறித்து பேசிய அவர், "அவர்கள் ஆகஸ்ட் 27 அன்றுதான் திருமணம் செய்துகொண்டார்கள்.
இரு குடும்பத்தினரும் சம்மதித்ததால் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
ஒருவேளை அவர்கள் தற்போது தேனிலவில் இருக்கலாம். அதனால்தான் அவர் அழைப்பை எடுக்கவில்லை. அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது உண்மைதான், அவர்கள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
52 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் நடைபெற்றுள்ள இந்த திருமணம் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |