அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 6.4 மில்லியன் மக்கள்: இந்தியர்கள் எத்தனை பேர்?
அமெரிக்காவில் சுமார் 6.4 மில்லியன் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் வாழ்வதாக ஆய்வு அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
6.4 மில்லியன் சட்டவிரோத குடியேறிகள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் எண்ணிக்கையை ஆய்வறிக்கை நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் கிட்டத்தட்ட அமெரிக்காவில் சுமார் 6.4 மில்லியன் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மொத்த மக்கள் தொகையில், சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் தொகை மட்டும் 3 சதவீதம் என்றும், வெளிநாட்டில் பிறந்தவர்களின் மக்கள் தொகை 22 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா, நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் இந்தியா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் மொத்தம் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு ஆவணங்களும் இல்லாமல் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் பெரும்பாலான இந்தியர்கள் கால்நடையாக அமெரிக்க எல்லையை கடந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைவதாக தெரியவந்துள்ளது.
நடுவானில் மாயமான விமான மேற்கூரை..! காற்றில் தூக்கி வீசப்பட்ட பணிப்பெண்: 1988ல் நடந்த பயங்கர சம்பவத்தின் பின்னணி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |