அசாத் அரசு கவிழ்ப்பைத் தொடர்ந்து 75 இந்தியர்கள் சிரியாவிலிருந்து வெளியேற்றம்
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் சிரியாவிலிருந்து தப்பியோடியதைத் தொடர்ந்து, தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளது.
இந்நிலையில், சிரியாவில் நிலவும் குழப்பமான சூழலுக்கிடையே, சிரியாவில் வாழ்ந்துவந்த 75 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
75 இந்தியர்கள் சிரியாவிலிருந்து வெளியேற்றம்
குழப்பமான சூழல் நிலவும் சிரியாவிலிருந்து நேற்று 75 இந்தியர்களை இந்திய அரசு வெளியேற்றியுள்ளது.
ANI
டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டிலுள்ள இந்திய தூதரகங்களின் கூட்டு முயற்சியின் பேரில் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்றப்பட்டவர்கள் லெபனானை வந்தடைந்துள்ளதாகவும், அங்கிருந்து அவர்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்குத் திரும்புவார்கள் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தவிர்த்து சிரியாவிலிருக்கும் மீதமுள்ள இந்தியர்கள், டமாஸ்கஸிலுள்ள தூதரகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |