63 ஆண்டுகள் தேக்கி வைத்த காதல்! ஸ்கூல் கிரஷ்க்கு 78 வயதில் லவ் ப்ரொபோஸ் செய்த நபர்

Viral Video
By Ragavan Jul 09, 2023 01:28 PM GMT
Report

காதல் என்பது காலம், வயது, நாடு ஆகியவற்றைக் கடந்த உணர்வு என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. காதல் எந்த நேரத்திலும் மலரலாம் என்றும், அதற்கு காலம், வயது, நாடு எதுவுமே தடையில்லை என்பதை நிரூபித்துள்ளனர் இந்த 78 வயது காதலரும் அவரது காதலியும்.

63 ஆண்டுகள் தேக்கி வைத்த காதல்

63 வருட காத்திருப்புக்குப் பிறகு, 78 வயதான தாமஸ் மெக்மீகின் (Thomas McMeekin) தனது உயர்நிலைப் பள்ளி தோழியான (School Crush) நான்சி கேம்பெல்லிடம் (Nancy Gambell) தனது காதலை வெளிப்படுத்தினார். இருவரும் ஒருவரையொருவர் ப்ரோபோஸ் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tampa Bay சர்வதேச விமான நிலையத்தில் தான் தாமஸ் மெக்மீக்கின் நான்சி கேம்பெல்லுக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது இதயத்தில் வைத்திருந்த அன்பை கூறினார்.

Thomas McMeekin, School Crush, Nancy Gambell, Proposal, Love

நான்சி தனது காதலை இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டதால், சுற்றி இருந்த பார்வையாளர்கள் இருவரையும் வாழ்த்தினர். இந்த மனதைக் கவரும் சம்பவம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வைரலாகும் வீடியோ

வீடியோவின் தொடக்கத்தில், விமான நிலைய நெரிசலில் தாமஸ் மெக்மீக் தனது காதலிக்காக பொறுமையிழந்து காத்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. சிறிது நேரம் கழித்து விமானத்தில் இருந்து வரும் நான்சியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்.

இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்ட பிறகு ஒன்றாக நடக்கிறார்கள். வீடியோவில் தாமஸ் மெக்மீக் நான்சியை அமைதியாக உட்காரவைத்த பிறகு, அவரது முழங்காலிட்டு ஒரு கடிதத்தை எடுத்து தனது காதலை முறைப்படி முன்மொழிவதைக் காணலாம்.

உன் வாழ்க்கைத் துணையாக என்னை ஏற்றுக்கொள்வாயா?

"மனைவியாக, தோழியாக, காதலியாக நான் விரும்பிய எல்லாமுமாக நீதான் இருக்கிறாய். என் காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேறு எதனுடனும் ஒப்பிடவும் முடியாது. என் வாழ்வின் இறுதி நாட்களை உனக்காகவும், இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக உன்னை வைத்திருக்க விரும்புகிறேன். உன் வாழ்க்கைத் துணையாக என்னை ஏற்று எனக்கு மதிப்பளிக்க வேண்டுகிறேன்" என்று ப்ரொபோஸ் செய்தார்.

உடனடியாக அப்பெண்ணும் 'ஆம்' என்று பதிலளிக்க, மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தனர். மேலும் பல பயணிகளும் இருவரின் காதல் விவகாரத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிப்பதை வீடியோவில் காணலாம்.

Thomas McMeekin, School Crush, Nancy Gambell, Proposal, Love

இந்த ஜோடியின் காதலை பலரும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர். சிலர் தங்கள் திருமணத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். மற்றவர்கள் அந்த வீடியோ தங்களை அழ வைத்ததாக எழுதினர். இன்ஸ்டாகிராம் கணக்கு Majically News இந்த அரிய காதல் வீடியோவை வெளியிட்டது.

Thomas McMeekin, School Crush, Nancy Gambell, Proposal, Love

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US