ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள்.., வெளிவந்த தகவலால் அதிர்ச்சி
தமிழகத்தில் இருக்கும் மாவட்டம் ஒன்றில் ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருக்கும் தகவல் வெளிவந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
79 வாக்காளர்கள்
தமிழக மாவட்டமான நீலகிரி, குன்னூர் சட்டபேரவை தொகுதியில், கோடேரி கிராமத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பாகம் 210-ல் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை 12-வது வார்டு மனோகரன் என்பவர் ஆய்வு செய்தார்.
அப்போது, குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 12, 17-ம் எண் வார்டுகள் மட்டுமே உள்ள நிலையில் 9, 10 வார்டுகளின் வாக்காளர்களும் இதில் இடம் பெற்றுள்ளதை கண்டறிந்தார் மனோகரன்.
அதாவது ஒரே வீட்டைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்தது. அதோடு, பல ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேறிய நபர்களின் பெயர்களும் இடப்பெற்றிருப்பது தெரியவந்தது.
இது மாதிரியான வாக்காளர் பட்டியலை தயார் செய்துவிட்டு அரசியல் கட்சியினர் குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது. வெறும் 818 வாக்காளர்கள் உள்ள வாக்காளர் பட்டியலில் வார்டு வரையறை கூட செய்யாமால் இருப்பது அலட்சியமாக தெரிகிறது என்றார் மனோகரன்.
அதோடு இந்த தவறுகளை சரிசெய்ய வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து குன்னூர் வட்டாட்சியர் ஜவகர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததையடுத்து பார்ம்-8-ல் விண்ணப்பித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |