2-வது அலையில் 798 மருத்துவர்கள் பலி! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் வெடித்த இரண்டாவது அலையின் போது 798 மருத்துவர்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) தற்போது நாடு முழுவதும் மாநிலங்கள் வாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் மொத்தம் 798 மருத்துவர்கள் இரண்டாவது அலையின்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தலைநகர் டெல்லில் மட்டும் அதிகபட்சமாக 128 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் 115 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 79 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 51 மருத்துவர்கள் இறந்துள்ளனர். தேசிய அளவில் தமிழகம் 5-வது அதிக இறப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது.
நான்காவது இடத்தில் இருக்கும் மேற்கு வங்கத்தில் 62 மருத்துவர்கள் ஊயிரிழந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே இறந்த நிலையில் புதுச்சேரி மிகக் குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
Indian Medical Association says 798 doctors died during second wave of COVID-19 across the country; maximum 128 doctors lost their lives in Delhi, followed by Bihar at 115 pic.twitter.com/mOBgRtQJp0
— ANI (@ANI) June 29, 2021