பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அராஜகம்: அட்டகாசத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அத்துமீறலில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்
கொரோனா, உக்ரைன் போர், பொருளாதார நெருக்கடி போன்ற அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகமெங்கிலும் உள்ள மக்கள் பிறந்து இருக்கும் 2023 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த புத்தாண்டை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பகிர்ந்தும் கோலாகலமாக வரவேற்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவில் மத்திய லண்டன் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வாண வேடிக்கைகளுடன் களைகட்டியது.
ராணியின் மறைவை நினைவு கூரும் வகையில் ட்ரோன்கள் மூலம் கிரீடம், E II R முத்திரை மற்றும் 50p நாணயம் போன்ற வடிவம் ஒளியூட்டப்பட்டன.
8 பேர் கைது
மத்திய லண்டன் பகுதியில் இரவு தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நிறைவடைந்து இருப்பதாக பிரித்தானிய காவல்துறை அறிவித்துள்ளது.
The events in central London have now finished.
— Metropolitan Police Events (@MetPoliceEvents) January 1, 2023
Over the course of the evening eight people were arrested for offences including assault on police, drunk and disorderly, and possession of an offensive weapon.
அத்துடன் நேற்று மாலையில் தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில், காவல்துறையை தாக்கியது, குடிபோதையில் மற்றும் ஒழுங்கீனம், தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.