புத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற பிரித்தானிய மக்கள்: மகாராணிக்கு சிறப்பு அஞ்சலி
2023ம் புத்தாண்டை பிரித்தானிய பொதுமக்கள் ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பிறந்தது புத்தாண்டு
பல்வேறு மறக்க முடியாத நினைவுகளை சுமந்தவாறு 2022ம் ஆண்டை கடந்து வந்து, உலக மக்கள் அனைவரும் 2023ம் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் ஆரவாரமாக கொண்டாட்டங்களுடன் வரவேற்று வருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானிய மக்களும் வானவேடிக்கைகளுடன் தங்களது புத்தாண்டை வரவேற்றுள்ளனர். மத்திய லண்டன் பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது, அதே நேரத்தில் அருகில் உள்ள குதிரை காவலர்கள் அணிவகுப்பில் ட்ரோன் காட்சிகள் நடைபெற்றது.
பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் அரசு கட்டிடங்கள் எரிய உக்ரைனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் LGBT வானவில் கொடி பின்னர் ஒளிக் காட்சியுடன் காட்டப்பட்டது.
ராணியின் மறைவை நினைவு கூரும் வகையில் ட்ரோன்கள் மூலம் கிரீடம், E II R முத்திரை மற்றும் 50p நாணயம் போன்ற வடிவம் ஒளியூட்டப்பட்டன.
உலக நாடுகளில் புத்தாண்டு
இதைப்போல உலக நாடுகள் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.
புத்தாண்டை முதல் நாடாக நியூசிலாந்து வரவேற்றது, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வெடிக்கப்பட்ட வானவேடிக்கைகள் அனைவரது கண்களையும் கவர்ந்தது.