உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது 2023 புத்தாண்டு! மக்கள் கொண்டாட்டம்... வீடியோ
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் ‘2023’ புத்தாண்டு பிறந்துள்ளது.
2022ஆம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து 2023 பிறக்கிறது. இந்தப் புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வரவேற்க தயாராக இருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எல்லோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உலகிலேயே முதல் புத்தாண்டு நியூசிலாந்தில் தொடங்கியது.
Watch live: New Zealand is marking the start of 2023 with a lights and fireworks display at the Sky Tower and Auckland Harbour Bridge. https://t.co/opkoeNgFrr
— Sky News (@SkyNews) December 31, 2022
கவுண்ட் டவுன் முடிந்து புத்தாண்டு தொடங்கியதும் தயாராக இருந்த வான வேடிக்கைகள் வெடிக்கத்தொடங்கின. மக்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் குரலெழுப்பி 2023-ஐ வரவேற்றனர்.
நியூசிலாந்தின் பல இடங்களிலும் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.