பெருவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 8 வீரர்கள் உயிரிழப்பு
8 dies in peru military helicopter crash after rescue operation: பெருவில், ரோந்து பணியில் இருந்த 3 ராணுவ வீரர்களை மீட்க சென்ற, ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 8 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 8 வீரர்கள் உயிரிழப்பு
தென்அமெரிக்க நாடான பெரு உலகின் மிகப்பெரிய கோகோ இலைகள் மற்றும் கோகோயின் உற்பத்தியாளராக உள்ளது.

பெருவின் தென்கிழக்குப் பகுதியில், கோகோ பயிரிடும் பகுதியானது, அபுரிமாக், ஈனே மற்றும் மன்டாரோ ஆறுகளின் தொலைதூரப் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளது. இப்பகுதி அதன் ஸ்பானிய சுருக்கப்பெயரான VRAEM என அறியப்படுகிறது.
இந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கெரில்லா குழுக்கள் உள்ளதால் இப்பகுதி பல ஆண்டுகளாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், ரோந்து பணியில் இருந்த 3 ராணுவ வீரர்களை மீட்டு வந்த ஹெலிகாப்டர், வியாழக்கிழமை இரவு கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இதில் மீட்கப்பட்ட 3 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். விமானி மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்களை ஏன் மீட்க வேண்டியிருந்தது என்பது குறித்து எந்த விவரங்களும் அளிக்கப்படவில்லை. விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.