பிரபல ராப் பாடகர்கள் மீது வழக்கு... இசைவிழா நெரிசலில் சிக்கி 8 பேர் பலி ஏராளமானோர் காயம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற இசை விழா ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துடன் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெக்சாஸ் மாநிலம் - ஹூஸ்டன் நகரில் கடந்த 5ம் தேதி இரவு பிரபல ராப் பாடகர் டிராவிஸ் காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது.
இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அந்நிலையில் டிராவிஸ் ஸ்காட் பாடும்போது, மேடை நோக்கி வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டதுள்ளது. இதனால், ரசிகர்களிடையே பீதி ஏற்பட, முண்டியடித்து வெளியேற முற்பட்டனர்.
இதனால் நெரிசல் மேலும் அதிகரித்தால் இதில் பலர் கீழே விழுந்துடன் நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த கிறிஸ்டியன் பாரடேஸ் என்ற வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த விபத்து தொடர்பாக ராப் பாடகர்கள் டிராவிஸ் ஸ்காட், டிரேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் டிராவிஸ் ஸ்காட் மற்றும் அஸ்ட்ரோவேல்டு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் பென் கிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹூஸ்டன் ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.