ஏஜியன் கடல் விபத்தில் 8 பேர் பலி: அதிக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
ஏஜியன் கடல் விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
படகு விபத்து
கிழக்கு மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் குறிப்பாக 6 குழந்தைகள் உயிரிழந்திருப்பது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான யுனிசெஃப் மாநில அலுவலகத்தின் இயக்குநர் ரெஜினா டீ டொமினிசிஸ் இந்த துயரச் சம்பவத்தை கண்டித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற விபத்துகளில் 2,508 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் மோதல்கள் மற்றும் வறுமையினால் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள ரெஜினா, இடம்பெயர்வு மற்றும் புகலிடத்திற்கான உடன்படிக்கையைப் பயன்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |