சிறுவன் செய்த தவறு... 8 பேர் பலியான துயரம்
தாய்லாந்து நாட்டில், சிறுவன் ஒருவன் தன் பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களுடைய ட்ரக்கை இயக்கியதால் 8 உயிர்கள் பலியாகியுள்ளன.
சிறுவன் செய்த தவறு...
தாய்லாந்து நாட்டின் Mukdahan மாகாணத்தில், 11 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோர் அனுமதியின்றி அவர்களுடைய ட்ரக்கை எடுத்து சாலையில் ஓட்டிவந்துள்ளான்.

சாலையோரமாக ஒரு கூட்டம் பௌத்த துறவிகள் புனித பயணமாக சென்றுகொண்டிருக்க, சிறுவன் இயக்கிய ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.
ட்ரக் மோதியதில் ஐந்து பௌத்த துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
அந்த பௌத்த துறவிகளில் மேலும் 14 பேர் காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |