ரயில் பெட்டி தீ விபத்தில் 8 பேர் பலியான விவகாரம்! 5 பேர் கைது
தமிழக மாவட்டம், மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரயில் பெட்டி தீ விபத்து
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, ரயிலில் சட்டவிரோதமாக சமையல் சிலிண்டர் மூலம் தேநீர் சமைக்க முயன்ற போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 பேர் கைது
இந்த விவகாரத்தில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்த லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென லக்னோ பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை தமிழகம் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |