காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய புதிய ராணுவ தாக்குதல்: 8 பேர் வரை உயிரிழப்பு
8 People Killed by Israel in Gaza Strip: காசாவில் இஸ்ரேல் நடத்திய புதிய ராணுவ தாக்குதலில் குறைந்தது 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படைகளின் புதிய தாக்குதல்
காசாவில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் புதிய ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர் முகமது அப்துல் அஜீத் அல்-நஜ்ஜார் உட்பட 8 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் முகமது அப்துல் அஜீத் அல்-நஜ்ஜார் கொல்லப்பட்டத்தை உறுதிப்படுத்திய காசா அரசின் செய்தி ஊடகப் பிரிவு, தாக்குதல் நடத்தப்பட்ட இடம் குறித்து எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 2023 தாக்குதலுக்கு பிறகு பத்திரிகையாளர் முகமது அப்துல் அஜீத் அல்-நஜ்ஜார் உடன் சேர்த்து இதுவரை 263 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் மற்றும் மனிதாபிமான குழுக்கள் இணைந்து காயமடைந்த 13 பேரை அல் குத்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான தீவிர காயத்துடன் போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.