திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்- பற்றி எரிந்த தீ! இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 பேர்
பிரான்ஸில் கட்டிடம் இடிந்து சரிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திடீரென சரிந்த கட்டிடம்
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பிரெஞ்சு நகரமான மார்சேயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்பினால் திடீரென கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. அதில் ஒரு சிலர் முன்கூட்டியே அறிந்து தப்பித்து வெளியே சென்று விட்டனர்.
@ndtv
ஆனால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். கட்டிடம் சரிந்து விழுந்ததில் தீ பற்றி எரிந்துள்ளது, இதனால் மீட்பு முயற்சிகள் மற்றும் விசாரணைகளை சிக்கலாகியுள்ளது.
மேலும் தீயினை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என என்று அவர் செய்தியாளர்களிடம் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய 8 பேர்
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றபோது, இடிபாடுகளிலிருந்து புகை மூட்டங்கள் எழும் வீடியோ வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க அனுப்பட்டுள்ளது.
@afp
"எங்களிடம் எதுவும் இல்லை, அடையாள அட்டை கூட இல்லை. அனைத்தையும் இழந்துவிட்டோம்," என தனது பெயரை ரோலண்ட் என்று கூறிய ஒருவர் அந்நாட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற போது அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறி, இடிந்து விழும் முன் அண்டை கட்டிடத்துக்கு சென்றுள்ளார். இதில் ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
@afp
பாதிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், அப்பகுதியில் உள்ள 30 கட்டிடங்கள் காலி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு எந்தவிதமான கட்டமைப்பு சிக்கல்களும் இருப்பதாகத் தெரியவில்லை என்று வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.