மூளையில் கட்டிகள் இருப்பதை எச்சரிக்கும் முக்கிய 8 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
மூளையில் அல்லது அதனைச் சுற்றியுள்ள செல்கள் அசாதாரணமாக வளர்வதால் மூளைக் கட்டி உருவாகிறது.
இந்தக் கட்டிகள் மூளைத் திசுக்கள், நரம்புகள், பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி மற்றும் மூளையை மூடியுள்ள சவ்வுகளில் தோன்றலாம்.
மேலும், சில கட்டிகள் மூளைப் புற்றுநோயாக இருந்து, வேகமாக வளர்ந்து மூளைத் திசுக்களை பாதிக்கக்கூடும்.
இந்த கட்டிகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்தவகையில், மூளையில் கட்டிகள் இருப்பதை எச்சரிக்கும் முக்கிய 8 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?
அதிக தலைவலி- காலையில் எழுந்தவுடன் தொடர்ந்து தலைவலி, கழுத்து வலி இருந்தால் மூளைக் கட்டியின் அறிகுறியாகும்.
வாந்தி- குமட்டல் இல்லாமல், அதிகாலையில் திடீரென வாந்தி எடுப்பதும் மூளைக் கட்டியின் முக்கிய அறிகுறியாகும்.
பார்வை மாற்றங்கள்- பார்வை மங்குதல், பார்வை குறைவது, பொருட்கள் இரண்டாகத் தெரிவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
உடல் சமநிலை- நடக்கும் போது தடுமாறுதல், சமநிலை இழத்தல், அடிக்கடி கீழே விழுவது போன்றவை மூளை தொடர்பான அறிகுறிகள் ஏற்படும்.
ஞாபக மாற்றங்கள்- திடீர் கோபம், நடத்தையில் மாற்றம், ஞாபக மறதி மற்றும் கவனக்குறைவு போன்ற மனநிலை மாற்றங்களும் முக்கிய அறிகுறிகளாகும்.
திடீர் வலிப்பு- 40 வயதுக்கு பிறகு முதல்முறையாக வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக நரம்பியல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
உடல் பலவீனம்- உடலின் ஒரு பக்கத்தில் கை அல்லது கால் பலவீனம் ஏற்படுத்தலும் முக்கிய அறிகுறிகளாகும்.
காது கேளாமை- ஒரு பக்க காதில் கேட்கும் திறன் குறைதல் அல்லது தொடர்ந்து சத்தம் கேட்பது போன்ற அறிகுறிகளும் மூளைக் கட்டியின் அறிகுறியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |