16 மாணவிகளின் உயிரை பறித்த பள்ளி தீ வைப்பு சம்பவம்: 8 மாணவிகள் செய்த சதி செயல்
கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் 8 மாணவிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கென்யா பள்ளியில் தீ விபத்து
கென்யாவின், நகுரு கவுண்டியின் கில்கில் பகுதியில் உதுமிஷி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், இதன் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவிகள் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் மாணவிகள் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வேகமாக பரவிய தீயில் சிக்கி சுமார் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 79 பேர் காயமடைந்துள்ளனர்.
8 மாணவிகள் கைது
இந்நிலையில் இந்த தீ விபத்து சம்பவமானது தற்செயலாக நடவடிக்கை என்பதை கண்டறிந்த பொலிஸார், கிட்டத்தட்ட 20 மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் இறுதியில் இந்த தீ விபத்தானது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கருதி பொலிஸார் 8 மாணவிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த மிக மோசமான செயலின் பின்னணி என்ன நோக்கம் உள்ளது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
30 மாணவிகளையும் விசாரணைக்காக அழைத்து சென்ற பொலிஸார், பெரும்பாலானோரை வெள்ளிக்கிழமை காலை விடுவித்துள்ளது.
இன்னும் சில மாணவிகள் பொலிஸாரின் விசாரணையில் இருக்கும் நிலையில், பெற்றோர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |