55 நாட்கள் கோமாவிலிருந்த சிறுவன்: பின்னர் நடந்த அதிசயம்
கார் விபத்தொன்றில் சிக்கி 55 நாட்களாக கோமாவிலிருந்த ஒரு சிறுவன், தன் சக மாணவர்கள் அனுப்பிய வீடியோ செய்திகளைக் கேட்டு கண் விழித்த அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
55 நாட்கள் கோமாவிலிருந்த சிறுவன்
சீனாவின் Hunan மாகாணத்தைச் சேர்ந்த Liu Chuxi என்னும் 8 வயது சிறுவன் கார் விபத்தொன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றுள்ளான்.

அவன் கண் விழிக்க வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையிலும் அவனது தாய் மகனை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக சென்றுள்ளார்.
அப்போது, ஒரு மருத்துவர் Liuவுக்கு பிடித்த இசை, அவனுக்கு பழகிய சத்தங்களை கேட்கவைத்தால் அது அவன் கோமாவிலிருந்து விடுபட உதவலாம் என்று கூறியுள்ளார்.
ஆகவே, Liu படித்த பள்ளியில் ஒலிக்கும் சத்தங்களை பதிவு செய்து மகன் படுக்கையருகே ஒலிக்கச் செய்துள்ளார் அவனது தாய்.
அத்துடன், Liuவின் ஒரு ஆசிரியரும் அவனது சக மாணவர்களும் வீடியோவில் அவனிடம் பேசுவது போல் பதிவு செய்துகொடுக்க, அதையும் மகனைக் கேட்கவைத்துள்ளார் அவனது தாய்.
’Liu எழுந்திரு, விளையாடப்போகலாம் என ஒரு நண்பன் கூற, உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் Liu, நான் பேசுவது உனக்குக் கேட்டால் கண்களைத் திற என ஒரு தோழியும், பரீட்சை வருகிறது, வா சேர்ந்து படிக்கலாம் என மற்றொரு நண்பனும் கூற, 45 ஆவது நாள் தன் ஆசிரியரின் சத்தத்தைக் கேட்ட Liu மெல்ல புன்னகைத்துள்ளான்.
55ஆவது நாள் Liuவின் ஆசிரியர், இனி உனக்கு வீட்டுப்பாடமே தரமாட்டேன் என்று கூற, மெல்ல கண் விழித்த Liu, ஆசிரியரைப் பார்த்து புன்னகைத்துள்ளான்.
அவன் முழுமையாக குணமாக இன்னும் காலமாகலாம் என்றாலும், 55 நாட்களுக்குப் பிறகு தன் மகன் கண் விழித்ததால் மகிழ்ச்சியடைந்துள்ள அவனது தாய், அவனுக்கு உதவியாக தொடர்ந்து அவனைப் பார்க்க வந்து அவனை உற்சாகப்படுத்திய அவனது ஆசிரியர், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |