தாயின் உயிரை காக்க கத்திக்குத்து வாங்கிய 8 வயது சிறுமி: அயர்லாந்தில் நேர்ந்த சோகம்
அயர்லாந்தில் தாயை காப்பாற்றும் முயற்சியில் 8 வயது சிறுமி கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு கத்திக்குத்து
அயர்லாந்தில் 8 வயது சிறுமியான மாலிகிகா அல் கட்டிப்(Malikika Al Kattib) கத்தியுடன் தாக்கிய ஒருவரிடமிருந்து தனது தாயை காப்பாற்ற முயன்ற போது, நியூ ரோஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் வாட்டர்ஃபோர்டுக்கு(University Hospital Waterford) சிறுமி அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 30 வயதுடைய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்ளூர் கவுன்சிலர் John Dwyer, குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
காவல்துறை இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் நியூ ரோஸ் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |