பழிக்குப் பழி... சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
புதுடெல்லியிலுள்ள அயா நகர் என்னுமிடத்தில் ரத்தன் ராம் (52) என்பவர் தனது அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, வழியில் தயாராகக் காத்திருந்த சிலர் ராமை சரமாரியாக சுட்டுள்ளனர்.

சுமார் 5 முதல் 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடு நீடித்த நிலையில், 80 குண்டுகள் சுடப்பட்டுள்ளன, அவற்றில் 69 குண்டுகள் ராம் உடலில் பாய, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பழிக்குப் பழி...
விடயம் என்னவென்றால், ராமுடைய மகனான தீபக் என்பவர், மே மாதம், தொழிலதிபரான அருண் லோஹியா என்பவரை சரமாரியாக சுட்டுக்கொன்றதாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காகவே தீபக்கின் தந்தையான ராம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
12 முதல் 13 பேர் நிகழ்த்திய இந்த பயங்கர துப்பாக்கிச்சூடு தொடர்பில் அருண் குடும்பத்தினர் உட்பட பலரை பொலிசார் விசாரணைக்குட்படுத்திவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |