இந்த நிறுவனத்தின் 80 சதவீத ஊழியர்கள் மில்லியனர்கள் - எப்படி சாத்தியம்?
நிறுவனம் ஒன்றில் 80 சதவீத ஊழியர்கள் மில்லியனர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.
என்விடியா
வீடியோ கேம்களுக்கான சிப் உருவாக்கும் நிறுவனமாக, 1998 ஆம் ஆண்டு, தைவானை பூர்விகமாக கொண்ட அமெரிக்கரான Jensen Huang என்பவரால் Nvidia உருவாக்கப்பட்டது.
தற்போது GPU என்னும் உயர் தர சிப் தயாரிப்பதில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனம் உலகின் மதிப்புமிக்க பொது வர்த்தக நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
மேலும், 4 ட்ரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டிய முதல் பொது வர்த்தக நிறுவனம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான Jensen Huang, 98.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார்.
80 சதவீத ஊழியர்கள் மில்லியனர்கள்
அதேவேளையில், நிறுவனர் மட்டுமல்லாது இந்த நிறுவனத்தின் ஊழியர்களில் 80 சதவீதம் பேரும் மில்லியனராக இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு மில்லியன் என்பது இந்திய மதிப்பில் ரூ.8.75 கோடி ஆகும்.
அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 50 சதவீததிற்கும் அதிகமானோர் 25 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
என்விடியா நிறுவனம், அதன் ஊழியர்களை 15 சதவீத தள்ளுபடியில் நிறுவன பங்குகளை வாங்க அனுமதிக்கிறது.
என்விடியா பங்குகளின் மதிப்பு சந்தையில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், இந்த திட்டமே ஊழியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய என்விடியா நிறுவனர் மற்றும் CEO Jensen Huang, "நிறுவனத்தின் 42,000 ஊழியர்களின் ஊதியத்தையும் ஓவ்வொரு மாதமும் நான் பார்க்கிறேன். உலகின் மற்ற CEO க்களை விட எனது குழுவில் அதிக பில்லியனர்களை நான் உருவாக்கியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |