இமய மலையின் 16,500 அடி உயரத்தில் ஏரியில் 800 எலும்புக்கூடுகள்: பல ஆண்டுகளாக நிலவும் மர்மம்
இமய மலையின் 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு ஏரி, எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. காரணம், அந்த ஏரிக்கரையில் ஏராளமான எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. அவ்வளவு உயரத்தில் அத்தனை எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
பல ஆண்டுகளாக நிலவும் மர்மம்
நேபாள எல்லையில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், Roopkund ஏரி என்னும் ஏரி உள்ளது. 1942ஆம் ஆண்டு, அப்பகுதிக்குச் சென்ற பிரித்தானிய வனத்துறை அலுவலர் ஒருவர், அந்த ஏரிக்கரையில் ஒரு அதிரவைக்கும் காட்சியைக் கண்டார்.
ஆம், அங்கே, அந்த ஏரிக்கரையில், சுமார் 800 எலும்புக்கூடுகள் கிடந்துள்ளன. இன்று வரை, அவ்வளவு உயரத்தில் அந்த எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பதை விளக்க யாருமில்லை.
அப்படி எலும்புக்கூடுகள் நிறைந்துகிடப்பதால், Roopkund ஏரி எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது.
உலவும் கதைகள்
அந்த எலும்புகள் எப்படி அங்கு வந்தன என்பது குறித்து, பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள். பல புராணக் கதைகளும் கூறப்படுகின்றன.
கன்னோஜ் வம்ச மன்னரான ஜஸ்தவால் என்பவர், கர்ப்பிணியான தன் மனைவியையும், தனது நாட்டியக்காரிகளையும் அழைத்துக்கொண்டு Roopkundஇலுள்ள, அயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தா தேவி கோவிலுக்குச் சென்றதாகவும், வழியில் அவர்கள் புயலில் சிக்கி மாண்டதாகவும், இந்த எலும்புக்கூடுகள் அவர்களுடையவைதான் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், அந்த எலும்புகளில் 37 எலும்புக்கூடுகளின் DNAவை ஆராய்ந்த ஆய்வாளர்கள், அவை, 1,000 ஆண்டுகளுக்கு முன் உள்ள எலும்புக்கூடுகள் என கண்டறிந்துள்ளார்கள். என்றாலும், எல்லா எலும்புக்கூடுகளும் அல்ல, ஏனென்றால், அவற்றில் சில 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இன்னொரு சுவாரஸ்ய விடயம், அவறில் சில, இந்திய மலைகளுக்கு சம்பந்தமே இல்லாத மத்தியதரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்களுடையவை என்பதும் தெரியவந்துள்ளது. அது ஒரு கல்லறையாக இருந்திருக்கக்கூடும் என்றும் ஒரு அறிவியலாளர் கருதுகிறார்.
எப்படியும், இந்த எலும்புக்கூடுகள் எப்படி இமய மலையின் 16,500 அடி உயரத்தை வந்தடைந்தன, அவை யாருடையவை என்பது இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |