மாரத்தானில் ஓடி அசத்தும் 84 வயதான பிரித்தானிய பாட்டி: உடலை பராமரிக்க உதவுவதாக கருத்து.
மாரத்தானில் பங்குபெற்று முன்னணி இடம் பிடித்த 84 வயதுடைய பிரித்தானிய பெண்.
மகனுடன் ஓடுவதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிப்பு.
பிரித்தானியாவில் 84 வயது மூதாட்டி மாரத்தான் போட்டியில் பங்கு பெற்று முன்னணி இடத்தை பிடித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை அல்ட்ரிஞ்சாமில் (Altrincham)-இல் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பார்பரா தாக்கரே (84) Barbara Thackra அவரது மகன் ஜேம்ஸுடன் பங்கு பெற்று 01:26:45 என்ற நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்ததாக Altrincham Today News செய்தியில் தெரிவித்துள்ளது.
77 வயதில் ஓட்டத்தை தொடங்கிய பார்பரா தாக்கரே(84) கடந்த கொரோனா கால ஊரடங்கின் போது ஒவ்வொரு வாரமும் 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) ஓடத் தொடங்கியுள்ளார்.
இதுத் தொடர்பாக பார்பரா தாக்கரே தெரிவித்துள்ள தகவலில் இத்தகைய உடற்பயிற்சி தனது உடலை தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட வைத்து இருக்க உதவுகிறது என்று நான் நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓட்ட பந்தயத்தில் தனது மகன் ஜேம்ஸுடன் இணைந்து ஓடியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவனுடன் ஓடுவதில் நான் கொண்ட அன்பை பகிர்ந்து கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
அத்துடன் தாக்கரேவின் சகோதரி ஆட்ரி நோயாளியாக இருந்த ஹீல்ட் கிரீனில் உள்ள செயின்ட் ஆன்ஸ் ஹாஸ்பிஸ்ஸுக்கு பணம் திரட்டிக்கொண்டிருக்கிறார்.
கூடுதல் செய்திகளுக்கு: கொலை செய்யப்பட்ட 50,000 ரஷ்ய வீரர்கள்: உக்ரைன் ஆயுதப்படை அறிக்கை!
அவர் ஏற்கனவே மொத்தம் 1,200 பவுண்டுகளை (ரூ. 1.11 லட்சம்) சேகரித்துள்ளார் என Altrincham Today News தெரிவித்துள்ளது.