கொலை செய்யப்பட்ட 50,000 ரஷ்ய வீரர்கள்: உக்ரைன் ஆயுதப்படை அறிக்கை!
உக்ரைனில் போரில் 50,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலி.
2077 டாங்கிகள், 236 விமானங்கள் என பெரும் இழப்பை ரஷ்யா சந்தித்து இருப்பதாக உக்ரைன் தகவல்.
உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மொத்தமாக 50,000 ராணுவ வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை, ஏழாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் இருநாட்டு இராணுவமும் பலமான இழப்புகளை சந்தித்து வருவதுடன் மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இருநாடுகளும் இழந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் உக்ரைனிய ஆயுதப்படை வெளியிட்ட ரஷ்ய இழப்புகள் குறித்த புதிப்பிப்புகளில், உக்ரைன் போரில் இதுவரை மொத்தமாக 50,150 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் கூடுதலாக 2077 டாங்கிகள், 4484 கவச போர் வாகனங்கள் மற்றும் 236 விமானங்கள் ஆகியவற்றை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
EPA
கூடுதல் செய்திகளுக்கு: வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ரஷ்யா: அமெரிக்க உளவுத் துறை தகவல்
பொதுவாகவே ரஷ்யா மற்றும் மேற்கத்திய ஏஜென்சிகளால் வெளியிடப்படும் இழப்பு விவரங்களை விட உக்ரைன் ஆயுதப்படை வெளியீடும் இழப்பு மதிப்பீடுகள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.