வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ரஷ்யா: அமெரிக்க உளவுத் துறை தகவல்
வட கொரியாவிடம் இருந்து ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்கும் பணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை உக்ரைன் போரில் பயன்படுத்தும் ரஷ்யா.
வட கொரியாவிடம் இருந்து மில்லியன் கணக்கான ராக்கெட் மற்றும் பீரங்கி வெடிகுண்டுகளை வாங்கி குவிக்கும் பணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கையில் போதிய தாக்குதல் உபகரணங்களை ராணுவ வீரர்களுக்கு வழங்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.
#Russia begins to buy #NorthKorean artillery
— NEXTA (@nexta_tv) September 6, 2022
This was reported by @nytimes, citing U.S. intelligence. pic.twitter.com/ofuWTp3eNO
இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நாடான வட கொரியாவிடம் இருந்து ரஷ்யா ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்குவது தொடர்பான நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறையின் இந்த தகவலை முதலில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதில் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகள் ஆகியவற்றால் உக்ரைனில் தொடர்ந்து கடுமையான ஆயுத விநியோக பற்றாக்குறை ரஷ்யா சந்தித்து வருகிறது, மேலும் இதனால் ரஷ்யர்கள் வருங்காலத்தில் கூடுதலாக வட கொரிய இராணுவ உபகரணங்களை வாங்கலாம் என நம்பப்படுவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் புலனாய்வு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
Photo: KCNA via Reuters
கடந்த வாரம் ஈரானில் தாயரிக்கப்பட்ட ட்ரோன்களை உக்ரைன் போர் களத்தில் ரஷ்யா பயன்படுத்தியதை ஜோ பைடன் அரசாங்கம் உறுதிப்படுத்தி இருந்த நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: இரண்டு தூதரக அதிகாரிகள் உயிரிழப்பு!
மேலும் ஈரானில் இருந்து பெறப்பட்ட ஆளில்லா விமானங்களில் ரஷ்யா பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.