ரஷ்ய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: இரண்டு தூதரக அதிகாரிகள் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல்.
இரண்டு ரஷ்ய தூதர அதிகாரிகள் மற்றும் ஆப்கானியர் ஒருவர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் திங்கள் கிழமை வெடிகுண்டு பெல்ட் அணிந்து வந்த தீவிரவாதி ஒருவர், திடிரென வெடிகுண்டினை வெடிக்க செய்ததில் இரண்டு ரஷ்ய தூதர அதிகாரிகள் மற்றும் ஆப்கானியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
Associated Press
இதுத் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாநில செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி தெரிவித்துள்ள தகவலில் தூரகத்தின் தூதரகப் பிரிவின் வாயிலில் வெடிகுண்டு வெடித்ததாக தெரிவித்ததுள்ளது, அங்கு ஆப்கானியர் தங்களது ரஷ்ய விசாக்கள் தொடர்பாக காத்து இருந்ததாகவும், விசாக்கான விண்ணப்பதாரர்களின் பெயர்களை அழைப்பதற்காக ரஷ்ய அதிகாரி வெளியே வந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தூதரகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு திங்கள்கிழமை பிற்பகுதியில் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் ரஷ்ய தூதரகத்தை ஏன் தீவிரவாதிகள் குறிவைத்தனர் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
DailyExcelsior
இந்தநிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ள தகவலில், இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பாளர்கள் மற்றும் அதன் குற்றவாளிகள் நிச்சியமாக தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத செயல், இதனை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் உளவுத்துறை முகவர்கள் மற்றும் கூடுதல் தலிபான் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
AFP - Getty Images
கூடுதல் செய்திகளுக்கு: பிரதமராக போரிஸ் ஜான்சனின் இறுதி உரை: லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து!
இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், குறைந்தது ஆப்கானியர் கொல்லப்பட்டதுடன், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.