பிரதமராக போரிஸ் ஜான்சனின் இறுதி உரை: லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து!
பிரதமராக தனது செயல்பாடு பூஸ்டர் ராக்கெட் போன்றது என போரிஸ் ஜான்சன் உரை.
புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு பின்னால் கன்சர்வேடிவ் கட்சி உறுதுணையாக இருக்க வேண்டும் என பேச்சு.
பிரித்தானியாவில் வெளியேறும் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு தனது இறுதி உரையை டவுனிங் தெருவிற்கு வெளியே நிகழ்த்தினார்.
போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வெளியேறும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இறுதி உரையை டவுனிங் தெருவிற்கு (Downing Street) வெளியே கூடி இருந்த மக்களிடம் நிகழ்த்தினார். அதில் நாட்டின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்க்கு தனது பாராட்டை தெரிவித்தார்.
Sky News
அத்துடன் நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் தனது செயல்பாட்டை ”பூஸ்டர் ராக்கெட்” என போரிஸ் ஜான்சன் (Boris Johnson ) விவரித்தார். மேலும் பிரெக்சிட், தடுப்பூசி வெளியீடு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவு அகியவற்றை முன்னிலைப்படுத்தி அவர் தனது நிர்வாகத்தின் சாதனைகளை அறிவித்தார்.
இதையடுத்து இனிவரும் ஒவ்வொரு அடியிலும் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ( Liz Truss ) உறுதுணையாக இருக்கப் போவதாக சபதம் செய்தார். அத்துடன் கன்சர்வேடிவ் கட்சி புதிய பிரதமரின் பின்னால் முழுமையாக நிற்க வேண்டிய தருணம் இது எனத் தெரிவித்தார்.
மேலும் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு தனது தீவிரமான ஆதரவை தவிர வேறு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
graziadaily
போரிஸ் ஜான்சனின் இறுதி உரையில் எரிசக்தி பொருள்களின் விலையேற்றத்திற்காக ஜனாதிபதி புடினை குற்றம்சாட்டியதுடன், லிஸ் ட்ரஸ் அரசாங்கம் இத்தகைய நெருக்கடிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று தனக்கு தெரியும் எனத் தெரிவித்தார்.
புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்பதற்காக ராணியால் முறைப்படி அழைக்கப்படும் போது, போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியில் இருந்தும், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
reuters
கூடுதல் செய்திகளுக்கு: கணக்காளரை மணந்த லிஸ் டிரஸ்! திருமணத்துக்கு பின் வேறு நபருடன் காதல்.. புதிய பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை
இந்தநிலையில் செவ்வாய் கிழமை பிற்பகல் லிஸ் ட்ரஸ் வெஸ்ட்மின்ஸ்டருக்குத் திரும்பி, அங்கு தனது அமைச்சர் குழு தொடர்பான வேலைகளை தொடங்குவார், ஆனால் அதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு முதல் முறையாக பிரதமராக உரையாற்றுவார் என தகவல் தெரியவந்துள்ளது.