இதய துடிப்பு அலாரத்தை அணைத்த செவிலியர்…FaceTime-மில் அரட்டை: உயிரிழந்த 85 வயது நோயாளி
அவுஸ்திரேலியாவில் மருத்துவ செவிலியர் ஒருவரின் அலட்சிய போக்கால் 85 வயது நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
செவிலியர் அலட்சியம்
2021ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி மேற்கு சிட்னியின் கிங்ஸ்வுட் பகுதியில் உள்ள நேபியன் தனியார் மருத்துவமனையில் ஜெரால்டின் லம்போ டிசோன் என்ற செவிலியர் இரவு நேர வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
அப்போது தனது குடும்பத்தினருடன் ஃபேஸ்டைமில் (FaceTime) அரட்டை அடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நோயாளிகளின் இதய துடிப்பு அலாரத்தை அணைத்துள்ளார்.
அத்துடன் துண்டித்த இதய துடிப்பு எச்சரிக்கை மானிட்டரை அவரது இரவு ஷிப்டுக்கு பிறகும் மீண்டும் இணைக்காமல் சென்றுள்ளார்.
இதற்கிடையில் 85 வயது நோயாளி, மொதுவான இதய துடிப்பு பிரச்சனையால் பாதிப்படைந்ததுடன், எச்சரிக்கை அலார அமைப்பு அணைக்கப்பட்டதால் செவிலியர் மற்றும் மருத்துவ ஊழியர்களால் அலாரத்தை கேட்க முடியாமல் உயிரிழந்தார்.
பொலிஸார் விசாரணை
இதையடுத்து பொலிஸார் விசாரணையில், செவிலியர் லம்போ டிசோனின் தொழில்முறை தவறான நடத்தை மற்றும் திருப்தியற்ற தொழில்முறை நடத்தை ஆகியவற்றில் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
Getty Images/Tetra images RF
மேலும் சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நோயாளியின் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு குறித்து மருத்துவர்களை செவிலியர் லம்போ டிசோன் எச்சரிக்கத் தவறியதையும் நியூ சவுத் வேல்ஸ் சிவில் மற்றும் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கண்டறிந்தது.
செவிலியர் லம்போ டிசோனின் அவரது இரவு ஷிப்டில் கிட்டத்தட்ட 66 நிமிடங்கள் பிலிப்பைன்ஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேஸ்டைமில் உரையாடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது செவிலியர் லம்போ டிசோனின் வழங்கிய விளக்கத்தில், அலார ஒலி மற்ற நோயாளிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியால் எச்சரிக்கை ஒலி அமைப்பை அணைத்ததாக தெரிவித்துள்ளார்.