87 வயதில் தந்தையான நபர்! மனைவிக்கு வயது 37..வியக்க வைக்கும் சொத்து மதிப்பு
சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியரான ஃபேன் செங், தனது 87வது வயதில் தந்தையாகியுள்ளார்.
புகழ்பெற்ற கலைஞர்
பாரம்பரிய சீன ஓவியங்களுக்கு புகழ்பெற்ற கலைஞர் ஃபேன் செங் (Fan Zeng).

இவருடைய ஓவியங்கள் 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4 பில்லியனுக்கும் அதிகமான யுவானுக்கு ஏலம் போயின.
இந்த தொகையானது இந்திய மதிப்பில் சுமார் 5,000 கோடி ரூபாய் ஆகும். குறிப்பாக, இவர் 1991யில் வரை ஒரு ஓவியம் 18.4 மில்லியன் யுவானுக்கு (2011யில்) விற்கப்பட்டது.
87 வயதான ஃபேன் செங் 37 வயது பெண்ணான சூ மெங்குடன் திருமண உறவில் வாழ்ந்து வருகிறார்.
குழந்தை
இந்த தம்பதிக்கு கடந்த 11ஆம் திகதி குழந்தை பிறந்தது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஃபேன் செங் அறிவித்தார்.
ஆனால், தனது ஒரே மகன் என்று அவர் கூறியது சர்ச்சையானது. ஏனெனில், ஃபேன் செங்கிற்கு ஏற்கனவே சியாவோஹுய் என்ற மகளும், ஃபேன் சோங்டா என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர்.
என்றாலும், அவர்களுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், அவர்களின் குடும்பங்களுடனான உறவுகளை முழுமையாகத் துண்டிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |