5 ஆண்டுகளில் OECD குடியுரிமை பெற்ற 9.25 லட்சம் இந்தியர்கள்
9.25 lakhs indians acquired citizenships in opec last 5 years: 5 ஆண்டுகளில், 9.25 லட்சம் இந்தியர்கள் OECD குடியுரிமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OECD குடியுரிமை பெற்ற 9.25 லட்சம் இந்தியர்கள்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நேற்று 'சர்வதேச இடம்பெயர்வு கண்ணோட்டம் - 2026' என்ற அறிக்கையை வெளியிட்டது.

OECD அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, கனடா உட்பட 38 உறுப்பு நாடுகள் உள்ளன.
2020-2024 வரையிலான 5 ஆண்டு காலத்தில், OECD உறுப்பு நாடுகள் கிட்டத்தட்ட 87 லட்சம் புதிய குடிமக்களை ஏற்றுக்கொண்டது. இதில் 10% இந்தியர்கள் ஆவார்கள்.
2020-2024 காலகட்டத்தில், 9,25,737 இந்தியர்கள் OECD நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இது 2015 - 2019 என்ற முந்தைய காலகட்டத்தில் பெற்ற 6,54,821 என்பதை விட 41.4 சதவீதம் அதிகம் ஆகும்.
குறிப்பாக, 2020-2024 காலகட்டத்தில் கனடாவில் மொத்தம் 2.61 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். இது முந்தைய 5 ஆண்டு காலத்துடன் ஒப்பிடும்போது 150% அதிகமாகும்.

பாதிக்கும் மேற்பட்ட OECD நாடுகளில் , 2014 மற்றும் 2024 க்கு இடையில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சியில் குடியேறிகள் குறைந்தபட்சம் 50% பங்களித்துள்ளனர்.
இந்தியாவில் இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை என்பதால், வெளிநாட்டு குடியுரிமையை பெற இந்திய குடியுரிமையை துறக்கின்றனர்.
வெளிநாட்டுக் குடியுரிமை பெறுபவர்களில் பலர், இந்தியாவில் சம்பாதிப்பதை விட சிறந்த உள்கட்டமைப்பு, வாழ்க்கைத் தரம் மற்றும் அதிக சம்பளத்தை நாடி வரும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் போன்ற தொழில் வல்லுநர்களாக உள்ளனர்.
நியூ வேர்ல்ட் வெல்த் தரவுகளைப் பயன்படுத்தி, ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் சுமார் 5,100 இந்தியக் கோடீஸ்வரர்களும், 2024 ஆம் ஆண்டில் 4,300 பேரும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், தெரிவித்துள்ளது.