லண்டன் புகைப்படக் கலைஞர் போட்டியில் 9 வயது இந்திய சிறுமிக்கு பரிசு! குவியும் பாராட்டுகள்
இந்தியாவை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு லண்டன் புகைப்படக் கலைஞர் போட்டியில் 2ம் பரிசு கிடைத்துள்ளது.
இந்திய சிறுமிக்கு பரிசு
இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த Natural History Museum சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான போட்டியை நடத்தினர்.
இந்த போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட இந்தியாவை சேர்ந்த ஷ்ரேயோகி மேத்தா 2ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
Indian Nine Year Old Becomes Global Name After Chance Photo
— RT_India (@RT_India_news) September 1, 2024
Faridabad's Shreyovi Mehta was out for a morning walk when she snapped a pic of 2 peacocks & landed herself in the running for Wildlife Photographer of the Year.
The competition, run by London's Natural History Museum,… pic.twitter.com/1tW9FOZMnI
டெல்லி அருகே உள்ள ஃபரிதாபாத் நகரில் வசித்து வரும் ஷ்ரேயோகி மேத்தா, தன்னுடைய குடும்பத்தினருடன் ராஜஸ்தானுக்கு சென்று இருந்த போது, அங்குள்ள கியோலதேவ் பூங்காவில் 2 பெண் மயில்கள் இருக்கும் தருணத்தை படம்பிடித்துள்ளார்.
இந்த புகைப்படம் தான் சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான போட்டியில் ஷ்ரேயோகி மேத்தாவுக்கு 2வது பரிசை பெற்றுத் தந்துள்ளது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |